கரூர்: குளித்தலை வை. புதூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (43). இவரிடம், குளித்தலை பெரியபாலம் மலையப்ப நகரைச் சேர்ந்த அலாவுதீன் என்பவர் ஆவின் நிறுவனத்தின் மேலாளர் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய சுரேஷ், அலாவுதீன் மனைவி அபிதா பேகம், மகன் ஜாகிர் உசேன் ஆகிய இருவரின் முன்னிலையில் அலாவுதீனிடம் 14 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
அதன்பிறகு, சுரேஷின் உறவினர்களான ஜெகதீசன், ரேவதி, நண்பர்கள் ராஜகோபால், பெரியசாமி ஆகிய நான்கு பேருக்கும் வேலை வாங்கித்தருவதாக கூறியதை நம்பி அலாவுதீனின் வங்கிக் கணக்கிற்கு 42 லட்சம் ரூபாய் தொகையை அனுப்பியுள்ளனர்.
மொத்தமாக 56 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்ட அலாவுதீன் அவர்களுக்கு வேலை வாங்கிதராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
மோசடியில் ஈடுபட்ட குடும்பத்தினர் கைது
இது குறித்து பணம் கொடுத்தவர்கள் திருச்சியிலுள்ள ஆவின் பால் உற்பத்தி லிமிடெட் நிறுவனத்திற்குச் சென்று விசாரித்தபோது தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர்.
இந்நிலையில் சுரேஷ் நேற்று (ஆக. 5) கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அலாவுதீன் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பிய ரசீதுகளை வைத்து புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் அலாவுதீன், அவரது மனைவி அபிதா பேகம், மகன் ஜாகீர் உசேன் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா சேவை - வாடகை கார்களை அடமானம் வைத்து மோசடி