கரூர்: கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் இயங்கும் நியாயவிலைக் கடைகளில் உள்ள 51 விற்பனையாளர் பணியிடங்கள் மற்றும் 2 எடையாளர் காலிபணியிடங்களுக்கு, 7,500 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இவர்களுக்கு நேர்காணல் கடிதம் அனுப்பப்பட்டன. இவர்களுக்கான டிசம்பர் 16 முதல் டிசம்பர் 28 வரை நடைபெறுகிறது.
இந்தக் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. மூன்றாவது நாளான இன்று(டிச.18) 750 விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். நேர்காணலில் பங்கேற்றவர்கள், தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து, முகக் கவசங்கள் அணிந்து கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான நேர்காணல் தேதி அறிவிப்பு