கரூர் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள மாவடியான் கோயில் தெருவில் கடந்து ஐம்பது ஆண்டுகளாகவே மக்கள் வசித்துவருகின்றனர். இந்நிலையில் அங்கு வசித்தவர்களிடம் வீடுகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் இதை கண்டித்து அப்பகுதி மக்கள் கரூர் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், 'கோபாலகிருஷ்ண ஐயர் என்பவர் 1993ஆம் ஆண்டே இந்த இடத்தை எங்களுக்கு அளித்தார். அமராவதி ஆற்றில் வெள்ளம் வந்தபோது கூட எங்களுக்கு மற்றொரு பக்கம் வீடு தர தயாராக இருந்தார்கள். இருப்பினும் நாங்கள் தொழில் செய்ய ஏதுவாக இந்த இடம் அமைவதால் அதனை மறுத்துவிட்டோம்.
ஆனால் தற்பொழுது மாரப்ப கவுண்டர் என்னும் தனிநபரின் வற்புறுத்தலின் பேரில் கரூர் நகராட்சி நிர்வாகம் எங்களது வீடுகளை இடிக்க முடிவு செய்து நாங்கள் வீடுகளை காலி செய்ய உத்தரவிட்டுள்ளது" என்றனர்.