ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலதரபட்ட உதவிகள் பலராலும் வழங்கப்பட்டு வருகிறது. கரூர் மேற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நெரூர் கிராமத்தில் 10ஆவது கட்டமாக பொதுமக்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மண்மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட நெரூர் கிராமத்தில் உள்ள என்.எஸ்.கிருஷ்ணன் நகரில் 60 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவு பொருள்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை ஜூம் (zoom)செயலி மூலம் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி தொடங்கி வைத்து பொது மக்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார். மேலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: 'சிறுமியை எரித்துக் கொன்ற ஆளுங்கட்சியினரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்' - ஸ்டாலின்