ETV Bharat / state

கரூரில் ஸ்கேட்டிங் பேரணி மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு செய்த மாணவர்கள் - கரூர் மாவட்டச் செய்திகள்

கரூர்: போக்குவரத்து விழிப்புணர்விற்கு ஸ்கேட்டிங் பேரணியினை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

Karur
Karur
author img

By

Published : Dec 16, 2019, 9:23 AM IST

கரூர் மாவட்டம், திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் நகரப் போக்குவரத்து காவல் துறை, தனியார் ஸ்கேட்டிங் அகாடமி மற்றும் தொலைக்காட்சி சார்பில் போக்குவரத்து விழிப்புணர்விற்கான ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

பேரணியில் அதிக பாரம் ஆபத்தில் முடியும், சாலைவிதிகளை மதிப்போம், மரணத்தினை தவிர்ப்போம், மிதவேகம் மிக நன்று உள்ளிட்ட துண்டுப் பிரசுரங்களை மாணவர்கள் பொது மக்களிடையே அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கரூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற இப்பேரணி நகரப் பேருந்து நிலையம் ரவுண்டானாவில் முடிந்தது.

ஸ்கேட்டிங் பேரணி

இதையும் படிங்க: சென்னை பேருந்துகளில் புதிய வசதி - போக்குவரத்துக் கழகம் முடிவு!

Intro:கரூரில் முதன்முறையாக போக்குவரத்து விழிப்புணர்விற்காக ஸ்கேட்டிங்க் பேரணியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்Body:கரூரில் முதன்முறையாக போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க கோரியும், தலைக்கவசம் உயிர்கவசம், கார்களில் கட்டாயம் சீட்பெல்ட் என்பதனை வலியுறுத்தி மாணவ, மாணவிகளின் ஸ்கேட்டிங்க் பேரணியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

கரூரில் முதன்முறையாக போக்குவரத்து விழிப்புணர்விற்காக ஸ்கேட்டிங்க் பேரணியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். கரூர் அடுத்த திருக்காம்புலியூர் பகுதியின் ரவுண்டானா அருகே துவங்கிய இந்த ஸ்கேட்டிங்க் விழிப்புணர்வு பேரணி கரூர் நகர போக்குவரத்து காவல் துறை சார்பிலும், அக்னி ஸ்கேட்டிங்க் அகாடமி மற்றும் கரூரில் உள்ள ஈகிள் தொலைக்காட்சியும் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தியது. முன்னதாக அனைவரிடத்திலும் கரூர் நகர போக்குவரத்து காவல்துறை சார்பில் காவல் ஆய்வாளர் மாரிமுத்து அனைவரிடமும் விழிப்புணர்வு துண்டு பிரசூரங்களை கொடுத்ததோடு, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களும் மக்களிடையே பிரசூரங்களை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதிக பாரம் ஆபத்தில் முடியும், சாலைவிதிகளை மதிப்போம் மரணத்தினை தவிர்ப்போம், மிதவேகம் மிகநன்று, போதையில் பயணம் பாதையில் மரணம், தலைக்கவசம் உயிர்கவசம், காரில் பயணம் சீட் பெல்ட் முக்கியம் என்கின்ற வாக்கியங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஸ்கேட்டிங் பேரணி தயாரானது. இந்த பேரணியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். இந்த ஸ்கேட்டிங் பேரணி கரூர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கோவை சாலை வந்து கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே வந்தடைந்தது. இது போன்ற இந்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி கரூரில் முதன்முறையாக என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.