ETV Bharat / state

மக்கள் நல்லதைக் கண்டுகொள்வதில்லை- சீமான் வேதனை

கரூர்: மக்கள் எப்போதும் நல்லதைக் கண்டுகொள்வதே இல்லை என்று வேதனை தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவர்கள் கண்டுகொண்டிருந்தால் அவர்களுக்கு பைபிள், குரான், பகவத்கீதை எதற்கு என கேள்வியெழுப்பியுள்ளார்.

seeman
author img

By

Published : May 15, 2019, 8:53 AM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் செல்வம் என்பவரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர், "கமல்ஹாசன், ரஜினிகாந்த் திடீரென அரசியலுக்கு வந்துவிட்டனர். ஆனால் அவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போதே அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்.

மக்கள் எப்போதும் நல்லதைக் கண்டுகொள்வதே இல்லை. அவர்கள் கண்டுகொண்டிருந்தால், அவர்களுக்கு பைபிள், குரான், பகவத்கீதை தேவைப்பட்டிருக்காது.

சீமான்

ஓட்டுக்கு ஒருவருக்கு 5,000 என்றால் நான்கு லட்சம் பேருக்கு எவ்வளவு என்று எண்ணி முடிப்பதற்குள் நாம் அனைவரும் இறந்து விடுவோம்" எனத் தெரிவித்தார்.

Intro:நல்லதை எப்பொழுதும் என் மக்கள் கண்டுகொள்வதே இல்லை இருந்திருந்தால் பைபிள் குரான் பகவத்கீதை எதற்கு - சீமான்

Body:கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை ஆற்றினார்.

அப்பொழுது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்:- விடுதலைப்புலிகள் என்பது புலி அல்ல அது ஒரு உணர்வு. கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் திடீரென அரசியலுக்கு வந்து விட்டனர் ஜெயலலிதா கருணாநிதி இருக்கும்பொழுது அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். எவன் கையில் ஆட்சி இருக்கணுமோ அவன் முச்சந்தியில் இருந்து கட்டுகிறான் எவன் வீதியில் இருக்கிறோமோ அவன் அங்கு இருக்கிறான்.
நல்லதை எப்பொழுதும் என் மக்கள் கண்டுகொண்டதே இல்லை இருந்திருந்தால் ஏன் இவர்களுக்கு பைபிள் குரான் பகவத்கீதை.

ஒரு ஓட்டுக்கு 5000 என்றால் நான்கு லட்சம் பேருக்கு எவ்வளவு எண்ணி முடிப்பதற்குள் இறந்து விடுவோம் என்று நகைச்சுவையாக கூறினார். மேலும் எனக்கு ஓட்டு போட்டால் பொருட்கள் போடாவிட்டால் இருங்கள் ஆனால் தயவு செய்து மறுபடியும் இவர்கள் கையில் நாட்டை ஒப்படைத்து விடாதீர்கள். மேலும் தொடர்ந்து என்றால் இப்படி முச்சந்தியில் இருந்து கத்திக் கொண்டு இருக்க முடியாது.

சாராயம் ஊற்றிக் கொடுக்க அதை விடவா மாடு மேய்கிறது குற்றம் மாடு மேய்ப்பது அரசு வேலையாக்கப்படும்.

பின்பு பொதுக்கூட்ட முடிந்த பின்பு குழந்தைக்கு திலீபன் எனப் பெயரிட்டார் 500 ரூபாய் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.