ETV Bharat / state

சாலைகளை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை! - விபத்துகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது

கரூர்: நகராட்சியில் ஆங்காங்கே குண்டும் குழியுமான தார்சாலைகள் எப்போது சீரமைக்கப்படும் என அப்பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

road-reconstruction
author img

By

Published : Nov 14, 2019, 7:56 AM IST

கரூர் நகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோயில், சீனிவாசபுரம், நரசிம்மபுரம் வடக்கு, செங்குந்தபுரம் 13 கிராஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தார்ச்சாலைகள், அலைபேசி புதை கேபிளுக்காகவும், பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் அடைப்பு ஆகியவற்றிற்காகவும், புதிய காவிரி கூட்டுக்குடிநீர் இணைப்பிற்காகவும் ஆங்காங்கே தோண்டப்பட்டது.

தோண்டப்பட்ட குழிகளை முறையாக மூடாமல் அப்படியே விட்டு விட்டதால், கல், மண் பெயர்ந்து தார்சாலைகள் முழுவதும் பழுதடைந்து காணப்படுகின்றது. இருசக்கர வாகன ஒட்டிகள் கூடுதல் கவனத்துடன் பயணம் செய்யும் நிலையிலும், சிறுசிறு விபத்துகள் ஏற்படுகின்றன.

சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆகவே, உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னராவது கரூர் நகராட்சி நிர்வாகமும், கரூர் மாவட்ட நிர்வாகமும் ஒன்றிணைந்து போர்க்கால அடிப்படையில் சாலைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கால பைரவர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு குடமுழுக்கு!

Intro:ஆங்காங்கே குண்டும் குழியுமான கரூர் நகராட்சியின் தார்சாலைகள் ? எப்போது ? சீரமைக்கப்படும் பொதுமக்கள் கோரிக்கை ! Body:கரூர் நகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோயில், சீனிவாசபுரம், நரசிம்ம புரம் வடக்கு, செங்குந்தபுரம் 13 கிராஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தார்சாலைகள் ஜியோ கேபிளுக்காகவும், பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் அடைப்பு ஆகியவற்றிற்காகவும், புதிய காவிரி கூட்டுக்குடிநீர் இணைப்பிற்காகவும் ஆங்காங்கே தோண்டப்பட்ட குழிகள், அப்படியே விட்டு விட்டதாலும், கற்கள், மண்கள் ஆகியவைகள் தான் தார்சாலைகள் முழுவதும் காணப்படுகின்றது. இந்நிலையில், இருசக்கர வாகன ஒட்டிகளும் கூடுதல் கவனத்துடன் பயணம் செய்யும் நிலையில், விபத்துகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆகவே, உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னராவது ஏதாவது ஆங்காங்கே பெயர்ந்துள்ள அல்லது பெயர்க்கப்பட்ட சாலைகளை அடைத்து பயணிகளுக்கு விபத்து இல்லாமல் உருவாக்க, கரூர் நகராட்சி நிர்வாகமும், கரூர் மாவட்ட நிர்வாகமும் ஒன்றிணைந்து போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது மக்களின் கோரிக்கை.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.