கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் கொளந்தானுரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அவ்வளவு குடியிருப்புகள் இருந்தும் அப்பகுதியில் சுகாதார வளாகம் இல்லாமல் இருந்துவந்தது.
அதனால் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளின் அடிப்படையில் கரூர் நகராட்சியானது 2014-2015ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகக் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் அந்த வளாகப் பணிகள் முழுவதும் முடிந்தும் இன்னும் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், கொளந்தானுர் சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டும், நகராட்சி நிர்வாகம் அதனை திறக்காமல் காலம் தாழ்த்திவருகிறது. அதனால் இப்பகுதியில் பலர் திறந்தவெளியில் மலம் கழிக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தப் பயனுமில்லை. எனவே அதனை விரைவாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.