ETV Bharat / state

பாரபட்சமின்றி நடவடிக்கை: தேர்தல் புகார்கள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் - தேர்தல் புகார்கள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்

கரூர்: தேர்தல் புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே
மாவட்ட தேர்தல் அலுவலர்
author img

By

Published : Apr 3, 2021, 10:20 PM IST

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கரூர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’கரூர் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி 4 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க 24 மணி நேர தேர்தல் கண்காணிப்பு படையினர் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்பு கொள்ளலாம்; விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்கச் செல்லும்போது அனைத்து வாக்காளர்களும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். பாதுகாப்பாக வாக்களிக்க வருமாறு வாக்காளர்களை கேட்டுக்கொள்கிறோம். கரூர் மாவட்ட மக்கள் விழிப்புணர்வோடு இருப்பதால் புகார்கள் அதிக அளவில் பதிவாகி உள்ளன. குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் தேசிய கட்டுப்பாட்டு புகார் மையத்தில் 980 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் 147 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதேபோல் இலவச தொலைபேசி எண்ணில் 143 புகார்கள் பெறப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் சிபிசி செயலி மூலம் 802 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 239 புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளன. 63 புகார்கள் தற்போது நிலுவையில் உள்ளன’ என்றார்.

கரூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்படும் என தகவல் பரவி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,’கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சட்டப்படி தேர்தல் நடக்கும். இந்த முறை கரூர் மாவட்டத்தில் வாக்குப் பதிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட தேர்தல் அலுவலருமான நானும் நேர்மையான தேர்தலை நடத்திட பாரபட்சமின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.

மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஷாங் சாய் உடனிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.