கரூர் மாவட்டம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அங்கு திருவிழாவை முன்னிட்டு வியாபாரம் செய்வதற்காக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கோயிலின் அருகே சாலை ஓரங்களில் கடைகளை அமைத்து உள்ளனர்.
நகராட்சி சார்பாக சாலையோர கடைகளுக்கு பணம் வரிவசூல் செய்வது வழக்கம். அதனை நகராட்சி நிர்வாகம் தனியாரிடம் ஏலத்தின் விட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி சார்பாக வரிவசூலில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நபர்கள் கடை உரிமையாளர்களிடம் தினமும் 500 முதல் 1000 ரூபாய் வரை வசூலிப்பதாகவும், பணம் வழங்காதவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகக் கூறி கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.