தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கரோனா தடுப்பூசி முகாம், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதிய கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பாக, கரூர் நகராட்சியில் செயல்படும் தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் நகராட்சி ஆணையாளர் சுதா தலைமையில் நகராட்சிக் கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தனியார் துறைகளில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி வரும் 11ஆம் தேதி முதல் பணியாற்றும் இடத்தில் சிறப்பு தடுப்பூசி மையம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அச்சமின்றி பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
இதையும் படிங்க:
தந்தத்திற்காக யானைகள் வேட்டை: சிபிஐ விசாரணையில் தொழிலதிபர்கள் இருப்பது அம்பலம்