கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்திலிருந்து ராமானூர் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள கோழிக் கடை அருகில் இருந்த மரத்தை, கோழிக் கடைக்காரர், தனது வியாபாரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கருதி வெட்டினார்.
அதனைக் கேள்விப்பட்ட எவர்கிரீன் அறக்கட்டளை அமைப்பு சார்பில், அங்கு சென்று மரத்தை வெட்டிய கோழிக் கடைக்காரருக்கு அறிவுரை வழங்கினர். மேலும் இனி, இது போன்ற மரங்களை வெட்டக்கூடாது என எச்சரித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த கரூர் நகராட்சி ஆணையர் சுதா வெட்டப்பட்ட மரத்தை பார்வையிட்டு, மரத்தை வெட்டிய கோழிக் கடைக்காரருக்கு அபராதம் விதித்தார்.
மேலும் இது இதுபோன்று சுற்றுச்சூழலுக்கு இடையூறாகச் செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி சார்பில் அறிவுறுத்தினார்.
சாலையில் இருந்த மரத்தை வெட்டிய கோழிக் கடைக்காரர் - அபராதம் விதித்த நகராட்சி ஆணையர்! - கரூர் நகராட்சி ஆணையர்
கரூர்: சாலையோரம் இருந்த மரத்தை வெட்டிய கோழிக் கடைக்காரருக்கு நகராட்சி ஆணையர் அபராதம் விதித்தார்.