கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு தமிழ்நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் வீடு இல்லாமல் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த நபர்களை நகராட்சி, மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்று தாந்தோணிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, முகக் கவசம், இருப்பிடம் ஆகியவற்றை வழங்கியது.
மேலும் கரோனா வைரஸ் தொற்று தொடர்பான அறிகுறி இருந்தால் அதனை கண்டறியும் வகையில் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
இவர்களுக்கு சமூக இடைவெளி, பாதுகாப்பு குறித்து ஒரு மீட்டர் இடைவெளியில் உணவு வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க... ‘கரோனா பரவலை தடுக்க தனித்திருங்கள்’ -அமைச்சர் விஜயபாஸ்கர்!