தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதனை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தொடங்கிவைத்தார். இதில், தடகளம், கூடைப்பந்து, கை பந்து, கபடி, டேபிள் டென்னிஸ், கால்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
தடகளப் போட்டியில் ஆண்களுக்கு, 100மீ, 200மீ, 800மீ, 1500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4 X100 மீ தொடரோட்டம் நடத்தப்பட்டது. அதேபோல், பெண்களுக்கு, 100மீ, 200மீ, 400 மீ, 800 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 4 X 100 தொடரோட்டம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
மேற்காணும் தனித்திறன் போட்டியில் முதலிடம் பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள். குழுப் போட்டியில் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். இப்போட்டிகளில் கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்துத்துறை அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆண்கள், பெண்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகள் நாளையும் தொடர்ந்து நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்சநிகழ்ச்சியின்போது மாவட்ட விளையாட்டு, இளைஞர் நல அலுவலர் ரமேஷ், கரூர் வட்டாட்சியர் அமுதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: அரசு அலுவலர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்!