ETV Bharat / state

தெருவிற்கு உதயநிதி பெயர் : கரூரில் நடப்பது என்ன? - chief minister

கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் தெருவின் பெயருக்கு உதயநிதி என்று பெயர் வைக்க கோரி சிறப்பு தீர்மானம் முன் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் உள்ள தெருவிற்கு உதயநிதி பெயர் மாற்றம்: அதிமுக எதிர்ப்பு!

author img

By

Published : Dec 22, 2022, 7:27 PM IST

கரூர்: மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூரில் உள்ள மாநகராட்சி டிச.20ம் தேதி செவ்வாய்கிழமை நடைபெற்ற மாமன்ற ஆலோசனை கூட்டத்தில், கரூர் மாநகராட்சி 36 வது வார்டு பகுதியில் மணக்களம் என்ற தெரு பெயருக்கு பதிலாக, உதயநிதி என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென அப்பகுதியில் மாமன்ற உறுப்பினர் வசுமதி பிரபு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அன்றைய கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக உறுப்பினர்கள் தவிர, மற்ற மாமன்ற உறுப்பினர்கள் சிபிஎம், காங்கிரஸ், திமுக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். மேலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டவுள்ள உதயநிதி தெருவில், உதயநிதி முதல் தெரு, உதயநிதி இரண்டாவது தெரு, உதயநிதி மூன்றாவது தெரு என பெயர் மாற்றம் செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்தித்தாள்களில் வெளியானது.

ஆனால் கரூர் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஊடகங்களுக்கு நேற்று முக்கிய செய்தி ஒன்றை வழங்கியுள்ளார். அந்த குறிப்பில் கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பெயர் வைப்பது சம்பந்தமாக எவ்விதமான தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் மகன் உதயநிதி பெயரில் தெருவிற்கு, உதயநிதி என்று பெயர் மாற்றம் செய்ய கரூர் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி இருப்பது தொடர்பாக சர்ச்சை உருவாகும் என்ற நிலையில், தற்பொழுது மாநகராட்சியின் மறுப்பு அறிக்கையை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து திமுகவினரிடம் கேட்டபோது, தலைவர்களின் பெயரில் தெருக்கள் பெயர்கள் இருப்பது ஒன்றும் புதிதல்ல மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் கலைஞர் சாலை, அண்ணா சாலை, பெரியார் சாலை என ஏற்கனவே உள்ளது. உதயநிதி திமுக தலைவரின் மகன் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் தாய்மார்கள் விரும்பும் தலைவராக உள்ளார் என தெரிவித்தனர்.

தமிழ்நாடு அமைச்சரவையில் உதயநிதி அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டதற்கு வாரிசு அரசியல் மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், மாநகராட்சியின் தெரு பெயருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் வாரிசான உதயநிதி பெயர் வைக்க முன்மொழியபட்டது பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.