ETV Bharat / state

ராகுல் வெற்றிக்காக இந்தியா காத்துக் கொண்டிருக்கிறது: கரூர் வேட்பாளர் ஜோதிமணி

கரூர்: இந்தியாவில் எந்தத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டாலும் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்காக நாடு காத்துக் கொண்டிருக்கிறது என்று கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பேசியுள்ளார்.

ஜோதி மணி
author img

By

Published : Apr 9, 2019, 1:13 PM IST

Updated : Apr 9, 2019, 6:19 PM IST

கரூர் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசுகையில், "தம்பிதுரை வாக்கு சேகரிக்க வந்தால் பொதுமக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிடுகின்றனர். தம்பிதுரையிடம் பணம் அதிகாரம் அனைத்தும் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. நாங்கள் கண்ணியத்தால் தேர்தலை சந்திப்போம். இப்பொழுதுகூட எங்கள் சுற்றுப்பயணத்திற்கு மக்கள் குவிந்துவருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் போன்று நடைபெறாமல் இருக்க, கரூர் மக்களவைத் தொகுதியில் பெண்கள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு இலவச உதவி எண் வழங்கப்படும். கரூரில் நலிவடைந்த சிறு, குறு நடுத்தர வணிகத்திற்கு ஜி.எஸ்.டி. போன்ற பிரச்னைகள் சரி செய்யப்படும்.

கேரள மாநிலம் மட்டுமல்ல இந்தியாவின் எந்தத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டாலும் அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்காக இந்தியா காத்துக் கொண்டிருக்கிறது” என்றார்.

ஜோதி மணி பேட்டி

Intro:கரூர் நாடாளுமன்றத் தேர்தல் நிறைவு பெற்றது; மக்கள் தேர்ந்தெடுத்து விட்டார்கள், தம்பிதுரை அரசியல் முடிவு--காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி

Body:கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு கரூர் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது நமக்கு அளித்த செய்தி

தேர்தலுக்கு என்று வியூகம் இல்லை எளிய முறையில் தேர்தலை சந்திக்கிறோம் இந்த தேர்தலில் மக்களிடம் விவசாய கடன் வறுமையில் இருக்கக்கூடிய மக்களுக்கு நான்காயிரம் விகிதம் வருடத்திற்கு 22,000 கல்விக்கடன் மேலும் மோடியின் ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட கல்வி புதிதாக கல்விக் கடன் கொடுத்தல் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு இவை அனைத்தும் ஜிஎஸ்டி போன்ற வரிகளின் கீழ் கொண்டு வந்து அதன் விலை குறைப்பு ஜிஎஸ்டி மீண்டும் பரிசீலனை செய்து சிறு குறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு வணிகத்தை பாதுகாத்தல் மேலும் திமுக விவசாயி கடனாக 5 சவரன் நகைகளை அடகு வைத்து இருந்தால் அவற்றை மீட்டு கொடுத்தல் கேபிள் டிவி கட்டணம் முற்றிலும் குறைத்தல்.

அதுமட்டுமின்றி கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு என்று சிறப்பு 5 திட்டங்கள்

1. குடிநீர் பிரச்சனையை முத்து புள்ளி வைத்தல். மேலும் தம்பிதுரை வாக்கு சேகரிக்க வந்தால் பொதுமக்கள் காலி குடத்துடன் முற்றுகையிடுகின்றனர் என்றார்.

2. படித்த இளைஞர்கள் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராக கரூர் நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதிய மையங்களை உருவாக்கி இளைஞர்களை பயன் பெறச் செய்தல்.

3. பெண்கள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு மேலும் பொள்ளாச்சி போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கரூர் நாடாளுமன்ற தொகுதி இருக்கக்கூடிய சட்டமன்ற தொகுதிகளுக்கு மையங்கள் அமைக்கப்பட்டு இலவச உதவி எண் வழங்கப்படும்.

4. கரூரை தவிர மற்ற பகுதிகள் அனைத்தும் விவசாயப் பகுதி என்பதால் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டு சேமித்து வைக்க உதவி செய்யப்படும்.

5. கரூரில் நலிவடைந்த சிறு குறு நடுத்தர வணிகத்திற்கு ஜிஎஸ்டி போன்ற பிரச்சினைகளை சரி செய்தல்.

மேலும் கரூரில் தேர்தலை சந்திக்க ஒரு யுத்தமே நடத்தப்பட்டு வருகின்றது என்றும் மனுதாக்கல் செய்தது முதல் பிரச்சாரம் வரை போக்குவரத்துறை அமைச்சர் மற்றும் தம்பிதுரையும் தொல்லை கொடுக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் காவல்துறை அதிமுக கரை வேட்டி கட்டிய பாதுகாப்பு துறையாக இருக்கிறது.

தம்பி துறையிடம் பணம் அதிகாரம் அனைத்தும் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை நாங்கள் கண்ணியமும் நாணயம் போன்றவற்றால் தேர்தலை சந்திப்போம்.

இப்பொழுது கூட எங்கள் சுற்றுப்பயணத்திற்கு மக்கள் குவிந்து வருகின்றனர் இந்த முறையும் தாமதமாகத்தான் செல்கிறோம் அந்த அளவுக்கு கூட்டம் அதிகரிக்கிறது வரவேற்பு இருக்கிறது மேலும் நீங்கள் வெற்றிபெற்று ஆட்சி என்ன செய்வீர்கள் என்று மக்கள் எங்களிடம் கேட்கின்றனர் ஒரு பட்டியலே எங்களிடம் இருக்கிறது என்றார்.

மேலும் சென்ற முறை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் கரூர் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை 73 சதவீதம் மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார் மீதி 27% பயன்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் 45 கல்லூரி களைகட்டியிருக்கிறார் அதுபோக வேளாண்மை கல்லூரி ஒன்று இப்பொழுது 300 படுக்கைகள் கொண்ட மருத்துவ கல்லூரி கட்டி இருக்கிறார் என்றார். இதனை நாங்கள் மக்களிடம் கூறியதற்கு நீதிமன்றத்திற்கு செல்வேன் என கூறியுள்ளார் நாங்கள் மேடையில் விவாதம் செய்ய தயார் அல்லது ஊடகங்கள் மேடையில் விவாதம் செய்தாலும் நாங்கள் வர தயார் கல்லூரி கட்டியதற்கு மறுப்பு சொல்ல எதிர்கொள்ள தயாராக இருக்கிறாரா.

கேரள மாநிலம் இருந்தாலும் சரி அல்லது இந்தியாவில் எந்த தொகுதியில் ராகுல் காந்தி நின்னாலும் கண்டிப்பாக வெற்றி பெறுவார் எனவும் அவரது வெற்றிக்காக இந்தியா காத்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.

Conclusion:
Last Updated : Apr 9, 2019, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.