ETV Bharat / state

அரசு இடத்தில் உள்ள மரங்களை ஏலத்தில் முறைகேடு! - மரங்களை ஏலம் விடுவதில் முறைகேடு

அரசு இடத்தில் உள்ள மரங்களை ஏலம் விடுவதில் முறைகேடு செய்வது குறித்த ஆடியோ வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 13, 2023, 6:55 AM IST

கரூர்: குளித்தலை வருவாய் கோட்டம் தோகமலை ஊராட்சி ஒன்றியம் கழுகூர் வருவாய் கிராமம், கழுகூர் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான பொதுப்பணித்துறை குளம் உள்ளது. இதில், 377 ஏக்கர் நிலத்தில் உள்ள அரசு மரங்களை ரூ.92 ஆயிரத்திற்கு மட்டும் ஏலம் எடுத்து ரூ.26 லட்சத்திற்கு தனியாக ஏலம் விட்டு அரசுக்கு பல லட்சங்கள் வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் சம்மந்தமான ஆடியோ சமூக வலைதளங்களில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோசடியில் அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், முக்கிய அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும், பல லட்சங்கள் கைமாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்து புகாரை சிபிசிஐடி விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை அவசர வழக்குப்பதிவு செய்ப்படுவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் ஏற்கனவே போடாத சாலைக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்பந்ததாரருக்கு உடந்தையாக சென்ற விவகாரத்தில் சஸ்பெண்ட் வரை சென்று விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில் தற்போது குளத்திலுள்ள மரங்களை வெட்டுவதற்கு அரசு ஏலம் எடுத்த தனி நபர் அதனை ஏளமாக விட்டு அதிக பணம் ஈட்டியதாக கூறப்படும் ஆடியோ பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Bank server Hacking: கூட்டுறவு வங்கிய சர்வரை ஹேக் செய்து கொள்ளை.. டெல்லியில் சிக்கிய நைஜீரியர்கள்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.