ETV Bharat / state

அப்பா பெயர் தெரியாதவர்களுக்கு என்ன பெயர்? கொச்சையாக பேசிய ஹெச்.ராஜா! - கரூரில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா

கரூர்: தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, அப்பா பெயர் தெரியாதவர்களுக்கு என்ன பெயர் என யோசித்துப் பாருங்கள் என கொச்சையாக பேசியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா
செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா
author img

By

Published : Mar 6, 2020, 3:29 PM IST

கரூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்த ஹெச். ராஜா அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். அவர் தங்கியிருந்த விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

“திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக கட்சியை முஸ்லிம் லீக் கட்சியாக மாற்றிவிட்டார். அவர் யாருக்காக போராடுகிறார் என்றால் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்களுக்காக போராடுகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் தலைமை சரியில்லை என என்னிடம் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் பல இடங்களில் ஊடுருவி இருக்கின்ற இஸ்லாமியர்கள் அனைவரையும் கண்டறிந்து அவர்களை தமிழ்நாடு அரசு கைது செய்து வெளியேற்ற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், “அப்பா பெயர் தெரியாதவர்களுக்கு என்ன பெயர் என நீங்களே யோசித்துப் பாருங்கள்” என கொச்சையாகப் பேசினார். மேலும், “தஞ்சைப் பெருவுடையார் கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது, நிர்வாகம் இந்து அறநிலையத் துறை செய்துவருகின்றது.

செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா

தஞ்சை பெருவுடையார் கோயிலில் குடமுழுக்கு விழா தமிழில் நடத்த வேண்டுமென யாரும் வாயைத் திறக்கக் கூடாது. எப்போது இஸ்லாமியர்களின் மசூதியில் தமிழில் நமாஸ் செய்கிறார்களோ அப்போது இந்துக் கோயில்களைப் பற்றி பேசட்டும்” எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஹெச். ராஜா உருவப்படம் எரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.