ETV Bharat / state

மூப்பிலும் ஓய்வில்லை! கால்நடையாக காந்தி கொள்கையைப் பரப்பும் தம்பதி! - கரூர் மாவட்ட செய்திகள்

கரூர்: காந்தியின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 317 கிலோமீட்டர் தூரம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபயணத்தை மேற்கொள்ளும் சாதனை தம்பதி.

காந்தி கொள்கையை பரப்பும் தம்பதி
author img

By

Published : Oct 10, 2019, 2:43 PM IST

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வசிக்கக்கூடிய கருப்பையா, சித்ரா தம்பதி, காந்திய தேசிய ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் சமூகப்பணியில் தீராத ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்தம்பதி, இதுவரை 85 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளனர்.

அதேபோல், காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை, தில்லையாடி அம்மையார் நினைவிடத்திலிருந்து திருப்பூர் பகுதியில் இருக்கக்கூடிய, திருப்பூர் குமரன் நினைவிடம் வரை நடை பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

நாட்டைக் காக்க ரஃபேல், ரஃபேலை காக்க எலுமிச்சை - நெட்டிசன்களிடம் சிக்கிய ராஜ்நாத் சிங்!

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூவர்ணக் கொடியைக் கையில் ஏந்தி, துண்டுப்பிரசுரங்களை மக்களுக்குக் கொடுத்து, காந்தியின் தேசபக்தி, அகிம்சை, சமூகநல பணி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைப்பயணமாகச் சென்று வருகின்றனர்.

பல மைல்கள் நடந்து, காந்தி கொள்கையை பரப்பும் தம்பதி

மேலும், இது 11 நாட்கள் பயணமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.கரூரில் சமூகநல ஆர்வலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளின் உறவினர்கள் அவர்களை வரவேற்று, நல்ல முறையில் உபசரித்து வழி அனுப்பினர். இந்த பாதையாத்திரையானது, அக்டோபர் 13ஆம் தேதி திருப்பூரில் நிறைவடைய உள்ளது என்றும், அப்போது தமிழ்ச் சங்கம் சார்பில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக கருப்பையா செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

Intro:

Body:காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தில்லையாடி வள்ளியம்மை நினைவிடத்தில் இருந்து திருப்பூரில் இருக்க கூடிய திருப்பூர் குமரன் நினைவிடம் வரை கிட்டத்தட்ட 317 கிலோமீட்டர் தூரம் நடை பயண விழிப்புணர்வு ஏற்படுத்தும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வசிக்கக்கூடிய கருப்பையா மற்றும் சித்ரா ஆகிய இருவரும் தம்பதியர் இவர்கள் காந்திய தேசிய ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்கள் மேலும் சமூகப்பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர் இவர்கள் இதுவரை 85 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சைக்கிள் பயணம் நடை பயணமாக சென்று சாதனை புரிந்துள்ளனர்.

அதனை அடுத்து காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் உள்ள சுகந்திர போராட்ட வீராங்கனை தில்லையாடி அம்மையார் நினைவிடத்தில் இருந்து திருப்பூர் பகுதியில் இருக்கக்கூடிய திருப்பூர் குமரன் உடைய நினைவிடம் வரை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூவண்ணக் கொடியை கையில் ஏந்திய வண்ணம் துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு கொடுத்து காந்திஜியின் தேசபக்தியையும் அகிம்சை வழியையும் சமூகநலத் பணியையும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபயணமாக சென்று வருகின்றனர் மேலும் இந்த நடைபயணமாக இது பதினொரு நாட்கள் பயணமாக இருக்கும் இதனை 13 ஆம் தேதி திருப்பூரில் நிறைவு செய்ய உள்ளனர். கரூர் வழியாக வந்த பொழுது சமூகநல ஆர்வலர்கள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகி உடைய உறவினர்கள் போன்றோர் அவர்களை வரவேற்று அவர்களுக்கு உபசரித்து வழி நடத்தினர்.

மேலும் இந்த பாதையாத்திரை ஆனது வருகின்ற 13 ஆம் தேதி திருப்பூரில் நிறைவடைய உள்ளது அப்போது தமிழ்ச் சங்கம் சார்பில் மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கருப்பையா செய்தியாளரிடம் கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.