ETV Bharat / state

காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து தெருக்களில் வீணாகும் அவலம் - drinking water pipe broken leading to wastage of water in karur

கரூர்: காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் சரியாகச் சீரமைக்காமல் குடிநீர் வீணாகிவருவதால் தண்ணீர் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.

drinking water pipe broken leading to wastage of water in karur

author img

By

Published : Apr 24, 2020, 12:15 PM IST

கரூர் மாவட்டத்தில் கோடைகாலம் நிலவுவதால் அடுத்து பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துவருகிறது. குறிப்பாக அழகியநத்தம், சின்னதாராபுரம், அரவக்குறிச்சி போன்ற பெருநகரங்களில் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தவித்துவருகின்றனர்.

இருப்பினும் கரூர் நகராட்சியிலிருந்து திருமாநிலையூர், தாந்தோன்றிமலை, ராயனூர் போன்ற பகுதிகள் வழியாக ஈசநத்தம் வரை செல்லும் சாலையில் அமைந்துள்ள காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் பலமுறை சீரமைத்து சரிவர இயங்காமல் குடிநீர் வீணாகிச் செல்கிறது. வீணாகச் செல்லும் குடிநீரை மக்கள் கூட்டமாக எடுத்துச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குடிநீர் குழாய் உடைந்து தெருக்களில் வீணாகும் அவலம்

இது குறித்து சமூக செயற்பாட்டாளர் ரகுமான் கூறுகையில், "பலமுறை கரூர் நகராட்சி இடம் இது தொடர்பாகப் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குறிப்பாக தார்ச்சாலையை முறையாக சீரமைக்காமல் அப்படியே தார்ப்பூசி சென்றுவிடுகின்றனர். இதனால் அடிக்கடி இதுபோன்று குடிநீர் வீணாகிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க... கிருஷ்ணகிரி மலை கிராமங்களில் குடிநீர் பஞ்சம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.