ETV Bharat / state

விலை போகாத வாழைத் தார்கள்: வேதனையில் விவசாயிகள்! - வேதனை தெரிவிக்கும் கரூர் விவசாயிகள்

கரூர்: கரோனா பாதிப்பு காரணமாக, 500 ரூபாய் முதல் 600 ரூபாய்க்கு விற்கக்கூடிய வாழைத்தார்கள் தற்போது 100 ரூபாய்க்குக்கூட விற்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வீணாகும் வாழைத்தார்கள்
வீணாகும் வாழைத்தார்கள்
author img

By

Published : Apr 17, 2020, 11:55 AM IST

கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், வேலாயுதம்பாளையம், வாங்கல், திருக்காம்புலியூர், லாலாபேட்டை, சிந்தலவாடி, மகிளிப்பட்டி, குளித்தலை, நச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை விவசாயம் செய்து வருகின்றனர். காவிரி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள இந்தப் பகுதிகளில் பாசன வாய்க்கால் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு பூவம் பழம், கற்பூரம், ரஸ்தாளி, ஏல அரிசி, பச்ச நாடன் உள்ளிட்ட வாழை ரகங்கள் பயிரிடப்படுகிறது.

இந்த விவசாயத்தை நம்பி சிறு, குறு விவசாயிகள், அதனைச் சார்ந்த தொழிலாளர்கள் என சுமார் 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த வைகாசி மாதம் நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு வாழைத்தார்கள் தயாராக உள்ளன. இங்கு விளையக்கூடிய வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலத்திற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுவந்தன.

இந்நிலையில் கரோனோ வைரஸ் பரவலை தடுக்க அரசு சார்பில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டது. இதையடுத்து, அறுவடைக்கு ஆள் கிடைக்காததாலும், வியாபாரிகள் வாழைத் தார்களை வெட்ட வராததாலும், வாழை கொள்ளையிலேயே பழுக்க ஆரம்பித்துவிட்டன.

தற்போது விவசாய விளைப் பொருள்களை எடுத்துச் செல்ல அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு நாள்களுக்கு முன்பாகவே வியாபாரிகள் வந்து வெட்டி சென்றிருந்தால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்காது. 500 ரூபாய் முதல் 600 ரூபாய்க்கு போகக்கூடிய வாழைத் தார்கள் தற்போது 100 ரூபாய்க்குக்கூட வாங்க வியாபாரிகள் வரவில்லை.

ஆகையால் வாழைத்தார்கள் வீணாகி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒரு ஏக்கருக்கு சுமார் இரண்டரை லட்சம்வரை செலவு செய்து ஒரு ரூபாய்கூட பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை நம்பி பல லட்சம் ரூபாய் கடன் வாங்கி விவசாயம் செய்து அறுவடை நேரத்தில் கரோனா வைரஸ் நடவடிக்கையால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விலைபோகாத வாழைத்தார்கள்

மேலும், விவசாயத்தை நம்பியே உள்ள விவசாயிகள், தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊரடங்கால் தர்பூசணி வியாபாரம் தொய்வு: விவசாயிகள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.