உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் லாக்டவுன் எனப்படும் நாடு தழுவிய பூட்டுதலை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. ஊரடங்கின்போது ஏழை, எளிய மக்களுக்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக முதலமைச்சர் உத்தரவின்படி ஏப்ரல் மாதத்திற்கான உணவுப் பொருள்கள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாமல் வழங்கப்பட்டது. அத்துடன் குடும்ப ரூ.1000 வழங்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து ஊரடங்கு மே மாதம் 3ஆம் தேதிவரை விரிவுபடுத்தப்பட்டதின் காரணமாக மே மாதத்திற்கான உணவு பொருள்களை ஏப்ரல் மாதமே குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகளில் விலையில்லாமல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கரூரில் உள்ள பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உணவுப் பொருள்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என மாவட்ட நிர்வாகம் சார்பாக பரிசோதனை நடைபெற்றது. இதனை அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதையும் படிங்க: கரோனா: மூடப்படும் தலைநகரின் எல்லைகள்!