கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்துகொண்டு தலைமை வகித்தார். இதில், வருவாய் அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கரூர் நகராட்சி ஆணையர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது, இதுவரை கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் அன்பழகன் எடுத்துரைத்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா தொற்று பரவுதலை தடுக்க சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இறுதித் தேர்வை 34 ஆயிரம் பேர் எழுதவில்லை... இதுதான் காரணமா?