ETV Bharat / state

குத்தகை நிலத்தில் கஞ்சா பயிரிட்ட நபர்கள் கைது!

author img

By

Published : Nov 27, 2019, 3:25 PM IST

கரூர்: ஒன்றரை ஏக்கர் நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்ட மூன்று நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

குத்தகை நிலத்தில் கஞ்சா பயிரிட்ட நபர்கள் கைது!
குத்தகை நிலத்தில் கஞ்சா பயிரிட்ட நபர்கள் கைது!

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மாமரத்துப்பட்டி கிராமத்தில் அருணாசலம் என்பவர் மூன்று ஏக்கர் விவசாய நிலத்தைக்கு குத்தகைக்கு எடுத்துள்ளார். அந்நிலத்தின் ஒருபகுதியான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டிராஜன் தலைமையில் சிறப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதை உறுதி செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையில் அருணாச்சலம் பெங்களூரில் இருப்பதாகவும் அவர் குத்தகைக்கு எடுத்த நிலத்தில் அவரின் மாமானர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் சிலரை வேலைக்கு வைத்து கஞ்சா பயிரை பயிரிட்டு வருவது தெரியவந்தது. பின்னர் முருகன் உள்ளிட்ட மூவரை கைது செய்த காவல்துறையினர் மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.

கரூரில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் விளைந்த கஞ்சா பயிர்

மேலும் இதுகுறித்து கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் கூறுகையில் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் சுமார் 250 கிலோ அளவுள்ள கஞ்சா கிடைக்கும் என்றும் அதிகபட்சமாக 15 லட்சம் மதிப்படையதாக இருக்கும் என்றார்.தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த அருணாச்சலம் காங்கிரஸ் கட்சியின் கடவூர் வட்டாரத் தலைவராக இருந்து வருவதாக விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க:

தோல்வியில் முடிந்த சபரிமலை பயணம்: மும்பை திரும்பிய 'திருப்தி தேசாய்'

Intro:விவசாய தோட்டத்தில் கஞ்சா பயிர் கண்டுபிடிப்பு

Body:கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் மைலம்பட்டி அடுத்த மாமரத்துப்பட்டி கிராமத்தில் அருணாசலம் என்பவர் புதிதாக மூன்று ஏக்கர் விவசாய நிலம் எடுத்திருந்தார் அதில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை கஞ்சா பயிர் செய்வதாக புகார் எழுந்ததை அடுத்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டிராஜன் தலைமையில் சிறப்பு படை மூலம் கண்காணிக்கப்பட்டு விசாரணை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அருணாச்சலம் பெங்களூரில் இருப்பதாகவும் அவரது தோட்டத்தில் வேலை பார்க்கும் தேனி மாவட்டம் வட நாட்டைச் சேர்ந்தவர் முருகன் அருணாச்சலத்தின் மாமனார் என்பது தெரியவந்தது அவர் தங்கவேல் இன்னும் சிலரை வைத்து அதில் கஞ்சா பயிரை பயிரிடுவதால் தெரியவந்தது இதில் முருகன் மற்றும் தங்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் கூறுகையில் ஒன்றரை ஏக்கர் பயிரிட சுமார் 250 கிலோ வரை இதில் கிடைக்கும் என்றும் அதிகபட்சமாக 15 லட்சத்தில் இருந்து அதற்கு மேலும் இதன் மதிப்பு இருக்கலாம் என கூறினார்.

தோட்டத்தை குத்தகைக்கு எடுத்த அருணாச்சலம் காங்கிரஸ் கட்சியும் கடவூர் வட்டார தலைவராக இருந்து வருவதாக விசாரணையில் தெரியவந்தது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.