கரூர் மாவட்டம் கடவூர் தரகம்பட்டியில் சிவம் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வருபவர் சிவம் ராஜேந்திரன். இவர் தேமுதிகவின் கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார்.
இவரது மனைவி பூமா ராஜேந்திரன், ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இந்நிலையில், இவர், சிவம் ராஜேந்திரன் 2013ஆம் ஆண்டு அப்பகுதியிலுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் தேமுகவின் உறுப்பினராக சேர்வதற்கான குடும்ப அட்டை போட்டோ உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி உள்ளார்.
அப்போது, வங்கியில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டு 109 நபர்களின் பெயரில் ஆறு கோடியே 50 லட்சம் ரூபாய் வரையில் மோசடி நடைபெற்றுள்ளது. இது நடந்து, 7 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி கோயம்புத்தூர் கடன் வசூல் தீர்ப்பாயம் மூலம் கிராம மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வங்கியில் நடந்த மோசடியில் சிவம் ராஜேந்திரன், பூமா ராஜேந்திரன் மற்றும் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு என மாவட்ட குற்றப்பிரிவு விசாரணையில் தெளிவாகக் குறிப்பிடும், கிராம மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
எனவே தங்களுக்கு மன வேதனை அளிப்பதாகவும், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை கைது செய்து, அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தனர்.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கியும் நடவடிக்கை எடுக்காத காவலர் மீது புகார்!