ETV Bharat / state

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது! - கொட்டாரம் பகுதி

கன்னியாகுமரி: குமரி அருகே 16 வயது பள்ளி மாணவியை கர்ப்பமடைய செய்த இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் போக்சோவில் கைது!
இளைஞர் போக்சோவில் கைது!
author img

By

Published : Jun 17, 2021, 5:00 PM IST

கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரம், பகவதி அம்மாள் புரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன் (23) கூலித் தொழிலாளி. இவர் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவருடன் நெருக்கமாகப் பழகி உள்ளார். அவரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்தப்பெண்ணை தமது இல்லத்திற்கு அழைத்துவந்து அவருடன் உறவு வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பலமுறை இது போன்று வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டிற்கு அழைத்துவந்து அவருடன் உறவு கொண்டுள்ளார்.
இந்நிலையில் அந்தப் பெண், தான் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தனது தாயிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்செய்தார்.
இந்தப் புகாரின்பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சொர்ணராணி, மணிகண்டனை கைதுசெய்தார். பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.