கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த மாறாமலைப் பகுதியில் ஏராளமான எஸ்டேட்டுகள் உள்ளன. இங்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவர் அங்கிருந்த கிராம்பு தோட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த காட்டெருமை ஒன்று கருப்பையாவை பலமாக முட்டியதில் படுகாயமடைந்தார்.
இதையடுத்து அவரை மீட்ட சக தொழிலாளர்கள் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தச் சம்பவம் தோட்டத் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கரோனா தொற்று இல்லை