கன்னியாகுமரியில் வரும் 15ஆம் தேதி சீசன் தொடங்க உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநரே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சீசன் தொடங்கும்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
குறிப்பாக விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்லும் படகு போக்குவரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் டோக்கன் வசதி ஏற்பாடு செய்ய உள்ளதாகவும், இம்முறையானது வரும் சீசனில் அமல்படுத்தப்பட உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!