கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பகுதியில் உள்ளது பூலாங்குளம். பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இந்தப் பகுதியில் ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டுவந்தன.
இந்நிலையில், நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இங்கு வளர்க்கப்பட்டுவந்த தேக்கு, வாகை வேம்பு உள்ளிட்ட மருத்துவ குணமிக்க மரங்களை வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அப்பகுதியைச் சேர்ந்த நபர், கரோனா வைரஸ் பரவல் காரணமான தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் நடமாட்டமின்றி இப்பகுதி காணப்படுகிறது.
இதனையறிந்த சிலர் மருத்துவ குணமிக்க மரங்களை வெட்டிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பொதுப்பணித் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் பார்க்க:அடையாளம் தெரியாத நபர்கள் வைத்த தீ : ஒரு ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்!