ETV Bharat / state

செங்கல் சூளைக்கு மண் கடத்தல் - இருவர் கைது - கன்னியாகுமரி மண் கடத்தல் விவகாரம்

கன்னியாகுமரியில் அனுமதி இல்லாமல் செங்கல் சூளைக்கு மண் அள்ளிச் சென்ற இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அனுமதி இல்லாமல் செங்கல் சூளைக்கு மண் கடத்தல்

author img

By

Published : Jun 25, 2022, 4:42 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மண் உள்ளிட்ட கனிமவளங்கள் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இதனிடையே மாவட்ட நிர்வாகம் குளங்களிலிருந்து மண் அள்ள தடை விதித்தது.

இருப்பினம் சிலர் மண் அள்ளுவதாக புகார்கள் எழுந்தது. இதனால் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி கைது நடவடிக்கைகளையும் எடுத்துவருகின்றனர். அந்த வகையில், பூதப்பாண்டி அருகேவுள்ள ஞானதாசபுரம் பகுதியில் காவல் துறையினர் இன்று (ஜூன் 25) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த இரு மினி லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அப்போது மண் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த சோபின் மற்றும் அனீஸ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். முதல்கட்ட தகவலில் இவர்கள் ஞானதாசபுரம் குளத்தில் இருந்து அனுமதி இல்லாமல் செங்கல் சூளைக்கு மண் கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: பதறவைக்கும் சிசிடிவி... அரிவாளால் வெட்ட வந்த ரவுடி.. அலறியடித்து தப்பிய பேராசிரியை...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.