ETV Bharat / state

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் - செல்பி மோகத்தால் ஆபத்தை உணராத பொதுமக்கள் - கடலோரப் பாதுகாப்பு காவல் துறையினர்

கன்னியாகுமரி: கடலில் சூறைக்காற்று வீசுவதால், சுற்றுலாப் பயணிகள் கடலுக்குச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி கடற்கரை
கன்னியாகுமரி கடற்கரை
author img

By

Published : Nov 17, 2020, 12:50 PM IST

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு உள்ளூர் வாசிகள், வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரி கடல் பகுதிகளில் தற்போது வீசிவரும் சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றத்தால் கடலின் அலைகள் ஆக்ரோஷமாக காணப்படுகிறு. இந்நிலையில் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் கடலின் உள்ளே உள்ள பாறைகளின் மீது ஏறி நின்று புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.

செல்பி மோகத்தால் ஆபத்தை உணராத சுற்றுலாப்பயணிகள்

இதுபோன்ற ஆபத்தான செயலால், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கவலைத் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கவும், பாதுகாக்கவும் கடலோரப் பாதுகாப்பு காவல் துறையினர், கடற்கரையின் ஆபத்தான பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் கரோனா காலம் என்பதால், தற்போது கடலோரப் பாதுகாப்பு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை.

இன்று காலை (நவம்பர் 17) இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் கடலின் பாறை மீது நின்றுகொண்டுப் புகைப்படம் எடுக்கையில், நிலைத்தடுமாறி கடலுக்குள் விழுந்து தத்தளித்துக்கொண்டிருந்தார். அவருடன் இருந்தவர்கள் அவரை உடனே மீட்டதால் , பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆதலால் முன்பு போலவே கடலோரப் பாதுகாப்பு காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,000 கன அடியாக குறைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.