ETV Bharat / state

'திமுக எக்காரணம் கொண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பது மக்களுடைய எண்ணம்!' - தேர்தல் பரப்புரை கூட்டத்தில் அமித்ஷா

தூத்துக்குடி: திமுக எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது மக்களுடைய எண்ணமாக உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

bjp
bjp
author img

By

Published : Mar 5, 2021, 5:24 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் மார்ச் 7ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உள் துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கவுள்ளார்.

இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வுசெய்ய தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முருகன் கூறுகையில், "மார்ச் 7ஆம் தேதி நாகர்கோவிலில் நடைபெறும் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்துகொள்கிறார். தமிழ்நாடு முழுவதும் பாஜக தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது. அதிமுகவுடனான எங்களுடைய கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுவருகிறது.

எல். முருகன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை நோக்கமாக வைத்து சசிகலா அரசியலை விட்டு விலகுவதாகச் சொல்லியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். மத விரோத சக்திகளோடு இணைந்து இந்துக்களுக்கு எதிராகத் துரோகம் செய்துவரும் திமுக இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. திமுக எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது மக்களுடைய எண்ணமாக உள்ளது.

மத்திய அரசு கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு மட்டும் ஐந்து லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் கடல் பாசிக்காக தனியாக சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தல் கட்டுப்பாடுகள் தொடங்கிய பின்னர், ராகுல் காந்தி கல்லூரி ஒன்றில் பிரதமருக்கு எதிராக விமர்சனம் செய்துள்ளார். அது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.