கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட கைப்பேசி விற்பனை, பழுதுபார்த்தல் மற்றும் ரீசார்ஜ் கடைகள் உள்ளன. தற்போதைய காலகட்டத்தில் அத்தியாவசிய தேவையாக கைப்பேசி மாறியுள்ள சூழலில், ஊரடங்கால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் பெரும்பாலான நேரத்தை கைப்பேசியுடன் செலவிடுகின்றனர்.
இந்நிலையில், கைப்பேசி தொடர்பான பழுது பார்த்தல், ரீசார்ஜ் உள்ளிட்ட தேவைகளுக்கு பொதுமக்கள் அல்லல்படுவதாகவும் பொதுமக்களின் வசதிக்காக கைப்பேசி கடைகளை குறுகிய நேரமாவது திறப்பதற்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று கடைக்காரர்களும் தொழிலாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.
தமிழ்நாட்டில் தற்போதைய ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தரப்பு தொழிலாளர்கள் வறுமையில் வாடும் வேளையில், அவர்களுக்காக தமிழ்நாடு அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. இதைப்போல கைப்பேசி, தொலைத்தொடர்பு தொடர்பான விற்பனையாளர்களுக்கும் நிவாரண வழங்க வேண்டும். மேலும், இத்தொழிலால் ஏராளமான தொழிலாளர்கள் தினசரி சிறிய அளவில் வருமானத்தை பெற்றுவந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் தொலைத்தொடர்பு தொடர்பான அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால், தொலைத்தொடர்பு விற்பனையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தினசரி சிறிது நேரமாவது தொலைத்தொடர்பு விற்பனை கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டுமென்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு அவர்கள் மனு அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: