ETV Bharat / state

வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கேரளாவில் மீட்பு.!

கன்னியாகுமரி: சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய 7.65 எம்.எம். பிஸ்டல், ஐந்து தோட்டாக்கள் ஆகியவற்றை தனிப்படையினர் கேரளாவில் மீட்டனர்.

Sub Inspector Wilson Murder Pistol Recovered In Kerala கன்னியாகுமரி வில்சன் கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி மீட்பு கேரளாவில் வில்சன் கொலை துப்பாக்கி மீட்பு நாகர்கோவில் வில்சன் கொலை துப்பாக்கி மீட்பு Kanniyakumari Wilson Murder pistol recovered Nagercoil Wilson Murder pistol recovered
Sub Inspector Wilson Murder Pistol Recovered In Kerala
author img

By

Published : Jan 23, 2020, 5:46 PM IST

Updated : Jan 23, 2020, 7:08 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலைசெய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் பத்து நாள்கள் காவல் துறை காவலில் எடுத்து விசாரணை நடத்திவந்தனர். மேலும், கடந்த இரண்டு நாள்களாக நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் தனி படையினர் விசாரணை நடத்திவந்தனர்.

அதில், வில்சனை கொலை செய்துவிட்டு கேரளாவிற்கு தப்பி ஓடியதாகவும், எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சாக்கடை ஓடையில் துப்பாக்கியை வீசி எறிந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நாகர்கோவிலிலிருந்து தனி படையினர் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவருடன் இன்று கேரளா மாநிலம் எர்ணாகுளம் பேருந்து நிலையதிற்குச் சென்று அங்குள்ள சாக்கடை ஓடையில் இறங்கி தேடினர்.

காவல் துறையினர் நடத்திய ஒரு மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சாக்கடையிலிருந்து குற்றவாளிகள் இருவரும் கொலை செய்ய பயன்படுத்திய 7.65 எம்.எம். பிஸ்டல், ஐந்து தோட்டாக்களை கண்டெடுத்தனர்.

சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி

நாளை முழுவதும் கேரளாவில் விசாரணை நடத்திவிட்டு நாளை மறுநாள் குற்றவாளிகள் இருவரையும் கர்நாடகா அழைத்து சென்று விசாரிக்கவும் தனிப்படையினர் திட்டமிட்டு ள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:

வில்சனை சுட்டுக் கொல்ல பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்!

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை கேரளா மாநிலம் ஏர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே சாக்கடை ஓடையில் இருந்து குமரி மாவட்ட தனி படையினர் மீட்டனர். கொலைக்கு பயன்படுத்திய 7.65 எம்.எம். பிஸ்டல் மற்றும் ஐந்து தோட்டாக்கள் மீட்பு.
Body:கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலைசெய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரையும் பத்து நாட்கள் போலிஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும், கடந்த இரண்டு நாட்களாக நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் தனி படையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வில்சனை கொலை செய்து விட்டு கேரளா தப்பி ஓடியதாகவும், அங்கு ஏர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள சாக்கடை ஓடையில் துப்பாக்கியை வீசி எறிந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து நாகர்கோவிலில் இருந்து தனி படையினர் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவருடன் இன்று கேரளா மாநிலம் ஏர்ணாகுளம் பேருந்து நிலையதிற்கு சென்று அங்குள்ள சாக்கடை ஓடையில் இறங்கி தேடினர்.

போலீசார் நடத்திய ஒரு மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சாக்கடையிலிருந்து, குற்றவாளிகள் இருவரும் கொலைக்கு பயன்படுத்திய 7.65 எம்.எம். பிஸ்டல் மற்றும் ஐந்து தோட்டாக்கள் கண்டெடுத்தனர். இதனைத் தொடர்ந்து தனிப்படையினர் இருவரையும் கேரளா அழைத்து சென்றனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நாளை முழுவதும் கேரளத்தில் விசாரணை நடத்தி விட்டு நாளை மறுநாள் குற்றவாளிகள் இருவரையும் கர்நாடகா அழைத்து சென்று விசாரிக்கவும் தனி படையினர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.Conclusion:
Last Updated : Jan 23, 2020, 7:08 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.