ETV Bharat / state

இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்திய இருவர் கைது! - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி: தக்கலையில் இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்திய இருவரை காவல் துறையினர் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Spirt smuggling two arrested
Spirt smuggling two arrested
author img

By

Published : Oct 5, 2020, 2:26 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் மறைமுகமாக கள்ளச்சாராயம் கடத்தப்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் கள்ளச்சாராய கடத்தலை கண்காணிக்க உத்தரவிட்டார்.

அதன்படி, தக்கலையை அடுத்துள்ள வெள்ளரி ஏழாம்புரம் பகுதியில் தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிதம்பர தாணு தலைமையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும்படியாக அங்கு வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இரண்டு லிட்டர் கள்ளச்சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கள்ளச்சாராயம் கடத்திய பொன்மனை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (48), ராஜன்(43)ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க:

சாலை விபத்து - ஒருவர் உயிரிழப்பு 15 பேர் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.