கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள மூட்டுவிளையைச் சேர்ந்தவர் சந்திரபாபு. இவர் வரிக்கலம்பாடு பகுதியில் பால் விநியோகம் செய்யும் ஏஜென்சி ஒன்றை நடத்திவருகிறார். இவர் பால் விநியோகம் செய்வதற்காக வெளியில் சென்ற சமயத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் அவரது கடையை உடைத்து, அங்கிருந்த 20 ஆயிரம் ரூபாயினை எடுத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அவர், கொற்றிக்கோடு பகுதி காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இதில், தக்கலை பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவும், வீட்டில் திருவதற்கு ஏதுமில்லை என்றால் சமைத்து வைத்துள்ள உணவுப் பொருள்களைத் திருடிச் செல்வதும் வாடிக்கையாக உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.