கன்னியாகுமரி மாவட்டம், மகாதானபுரத்தை சேர்ந்தவர் மணி(26). இவர், பரமார்த்தலிங்கபுரத்தில் பழைய இரும்பு பொருள்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்று அவரது கடையை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த ஒன்பது கிலோ காப்பர் கம்பிகள், 10 கிலோ இரும்பைத் திருடிக் கொண்டு தப்ப முயன்றனர். ஆனால், அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடம் அவர்கள் பிடிபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கன்னியாகுமரி காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து விசாரனை மேற்கொண்டனர். அதில், அவர்கள் லீ புரத்தைச் சேர்ந்த ராஜவேல் முருகன்(24), முருகன் குன்றத்தைச் சேர்ந்த ஆண்டனி(49) என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: காவல் துறையினரைக் கடுமையாகப் பேசிய பெண் வழக்கறிஞர்: வைரலாகும் காணொலி