கன்னியாகுமரி: மாலத்தீவில் தலைநகர் மாலே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 10ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில், பங்காளதேஷ் நாட்டைச்சேர்ந்த 2 பேர் உட்பட 9 இந்தியர்கள் பலியாகி உள்ளனர்.
இதில் கன்னியாகுமரி மாவட்டம், காஞ்சிரகோடு பகுதியைச்சேர்ந்த ஜெனில். இவர் ஆந்திராவைச்சேர்ந்த சுந்தரி என்ற பெண்ணை திருமணம் செய்து, அங்கு வாழ்ந்து வந்தார். தற்போது கணவன், மனைவி 2 பேரும் பலியானதாக தகவல் வெளிவந்தது.
இதுபோன்று திருவண்ணாமலையைச் சேர்ந்த தேன்மொழி என்பவர் இவ்விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. உடலினை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆந்திரா (5), பெங்களூரு (1) என மொத்தம் 9 இந்தியர்கள் பலியாகியுள்ள நிலையில், பலர் படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் குமரி மாவட்டத்தைச் சார்ந்த ஜெனில் - சுந்தரி இருவர் பலியான நிலையில், அவர்களின் உடல்கள் இன்று மாலத்தீவில் இருந்து விமானம் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள சொந்த ஊரான காஞ்சிரங்கோட்டிற்கோ அல்லது அவர் மனைவி ஆந்திராவைச் சேந்தவர் என்பதால் ஆந்திராவிற்கோ கொண்டு செல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, குமரி மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இதுவரை இல்லை எனவும்; அங்கு உயிரிழந்தவர்களின் உடலை சொந்த ஊர் அனுப்பி வைக்கும் பணியினை தூதரகம் மூலம் மாலத்தீவு வாழ் இந்தியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹோட்டல் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி? - போலீசார் விசாரணை!