ETV Bharat / state

இளைஞருடன் மாயமான மாணவி: பெற்றோரின் தீக்குளிப்பு அறிவிப்பால் காவலர்கள் குவிப்பு

குமரியைச் சேர்ந்த இளைஞருடன் மாயமான கல்லூரி மாணவியின் பெற்றோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்கப்போவதாகத் தகவல் பரவியதையடுத்து, அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

தீக்குளிப்பு முயற்சி
தீக்குளிப்பு முயற்சி
author img

By

Published : Jun 28, 2021, 7:16 AM IST

கன்னியாகுமரி: சென்னை தியாகராய நகரைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகள் தேவதர்ஷினி (18). ஓசூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவந்தார். இந்நிலையில் இவரை கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெனில் என்ற இளைஞர், கடந்த சில நாள்களுக்கு முன்னர் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த வேலு, அவரது மனைவி ஆகியோர் கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர் கன்னியாகுமரியின் கருங்கல் பகுதிக்கு வந்து மகளைத் தேடிவந்தனர். ஆனால், வேலுவின் மகள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து வேலு, அவரது மனைவி ஆகியோர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று (ஜூன் 27) தீக்குளிக்கப் போவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும் தாலுகா அலுவலகம் வழியாக, ஆட்சியர் அலுவலகத்திற்குச் செல்லும் பாதையும் மூடப்பட்டது.

தற்கொலை முயற்சி அச்சுறுத்தல் காரணமாக காவலர்கள் குவிக்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்டுத்தியது.

இதையும் படிங்க: மாணவியை கர்ப்பமாக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.