ETV Bharat / state

மார்த்தாண்டத்தில் கரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க பாமக கோரிக்கை! - Kanyakumari district

கன்னியாகுமரி: மக்கள் பயன்பெறும் வகையில் மார்த்தாண்டம் பகுதியில் கரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டும் என்று பாமக கோரிக்கை வைத்துள்ளது.

PMK demand
PMK demand
author img

By

Published : Jul 20, 2020, 5:05 PM IST

பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் இரா. ஹரி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில், “குமரி மாவட்டத்தில் தினமும் சுமார் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா நோய் ஏற்படுகின்றது. இவர்கள் அனைவரும் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கோணம் கல்லூரியிலும், தக்கலை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இவர்களை முறையாகப் பராமரிக்கவில்லை என்று புகார்கள் வருகின்றன. மேலும், கரோனா பரிசோதனைக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குறிப்பாக கோதையாறு, பேச்சிப்பாறை, அனைமுகம், கொல்லங்கோடு, கடலோர பகுதிகளிலிருந்தும் மக்கள் மருத்துவமனைக்கு வருகின்றனர்.

ஆனால், கரோனா பரிசோதனைக்காக வரும் இவர்களுக்கும், இவர்களது குடும்பத்தாருக்கும் முறையான போக்குவரத்து வசதி எதுவும் இல்லை. இதனால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாவட்டத்தில் குறிப்பாக மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகள், கல்லூரிகள், ரயில் பெட்டி ஆகியவற்றில் அரசுச் செலவில் கரோனா பரிசோதனை, சிகிச்சை மையங்களை நிறுவி அனைவருக்கும் பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.