குடியேறும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்! - மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
கன்னியாகுமரி: நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![குடியேறும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள்! போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10566343-thumbnail-3x2-handi.jpg?imwidth=3840)
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில், “தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி வரும் மாத உதவித் தொகையை 5 ஆயிரமாக உயர்த்திட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-ன் படி தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பில் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.
பின்னர், அங்கு வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்ற 60-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: பேராசிரியரைக் கண்டித்து பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் போராட்டம்