ETV Bharat / state

ஆண் பப்பாளி கன்றுகளை விவசாயியை ஏமாற்றிய தோட்டக்கலை அலுவலர்கள்! - தோட்டக்கலை அலுவலர்கள்

கன்னியாகுமரி: அரசு தோட்டக்கலை அலுவலர்கள் விவசாயி ஒருவருக்கு ஆண் பப்பாளி கன்றுகளை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

papaya tree
author img

By

Published : Oct 3, 2019, 12:48 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சகாயம். இவர் கடந்த 15 வருடங்களாக அன்னாசி விவசாயம் செய்துவருகிறார். விவசாயி சகாயம் கடந்த மே மாதம் கன்னியாகுமரி தோட்டக்கலை அலுவலர்களின் ஆலோசனைப்படி மஞ்சாலுமூடு அருகே முக்கூட்டுக்கல் பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். அந்நிலத்தில் ரெட்லேடி, கோவை போன்ற ரகங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பப்பாளி கன்றுகளை நடவும் செய்து மூன்று மாதம் பராமரிப்பு செய்து வந்துள்ளார்.

மகசூல் வரும் வேளையில் சுமார் 400க்கும் மேற்பட்ட பப்பாளி கன்றுகளில் காய்கள் காய்க்காமல் பூக்க மட்டுமே செய்துள்ளன. இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயி சகாயம் பப்பாளி கன்றுகளை பரிசோதித்ததில் அந்த கன்றுகள் முழுவதும் ஆண் இனத்தைச் சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி சகாயம் தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதற்கு அலுவலர்கள் எந்த பதிலும் அளிக்காமால் அலட்சியமாக இருந்துள்ளனர்.

ஆண் பப்பாளி கன்று

எனவே, சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பப்பாளி கன்றுகளை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் இது போன்று விவசாயிகள் ஏமாந்து போகாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயி சகாயம் கோரிக்கை விடுத்துள்ளார். பப்பாளி மரத்தில் ஆண், பெண் என இரண்டு வகைகள் உள்ளன. ஆண் பப்பாளி மரம் பூக்கும் ஆனால் காய்க்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை...! - மோசடியில் ஈடுபட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அருமனை அருகே நடவு செய்த பப்பாளி கன்று எல்லாம் பூ மட்டுமே பூக்கிறது காய் காய்ப்பதில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பப்பாளி விவசாயி அரசு தோட்டக்கலை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

Body:கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் பகுதியை சேர்ந்த விவசாயி சகாயம் இவர் கடந்த 15 வருடங்களாக அன்னாசி விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் விவசாயி சகாயம் கடந்த மே மாதம் கன்னியாகுமரி தோட்டக்கலை அதிகாரிகளின் ஆலோசனைப்படி மஞ்சாலுமூடு அருகே முக்கூட்டுக்கல் பகுதியில் ஒன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் ரெட்லேடர், கோவை போன்ற ரகங்களை சேர்ந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட பப்பாளி கன்றுகளை வாங்கி நடவு செய்தார்.

ஆனால் மூன்று மாதம் பராமரித்து மகசூல் வரும் வேளையில் சுமார் நாநூற்றுக்கும் மேற்பட்ட பப்பாளி கன்றுகள் பூக்க மட்டுமே செய்கின்றன. ஆனால் காய் காய்க்காமல் உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி பப்பாளி கன்றுகளை பரிசோதித்தில் அந்த கன்றுகள் முழுவதும் ஆண் கன்று என்று உறுதியானது.

இது குறித்து விவசாயி சகாயம் தோட்டக்கலை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டப்போதும், அதிகாரிகள் எந்த பதிலும் கூறாமல் விவசாயியை அலக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பப்பாளி கன்றுகளை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், மேலும் தமிழகத்தில் இது போன்று விவசாயிகள் ஏமாந்து போகாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயி சகாயம் கோரிக்கை விடுத்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.