கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றிய கிராமக் கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் கூட்டாலுமூடு பத்ரேஷ்வரி மண்டபத்தில் பாத பூஜை நடைபெற்றது. இந்தப் பாத பூஜையில் குழந்தைகள் பெற்றோருக்கும், மாணவர்கள் ஆசிரியர்களுக்கும், மருமகள் மாமனார், மாமியாருக்கும், பெரியோர்கள் துறவிகளுக்கும் புனித நீரால் பாதங்களை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்து மலர் அர்ச்சனை செய்து பாத பூஜையில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. பின்னர் பாதப்பூஜையில் ஈடுபட்டவர்களுக்கு ஆசி வழங்கினர். இந்த நிகழ்ச்சியில். வெள்ளிமலை ஆசிரம துறவி சைதன்யானந்தஜி, மஹாராஜ், பல துறவிகள், சமய சான்றோர்கள், ஆன்மிக ஆர்வலர்கள் உள்பட ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் போராட்டம்!