ETV Bharat / state

"பிற மொழி பேசும் நீதிபதிகளை தமிழ்நாடு நீதிமன்றங்களில் நியமிக்கக் கூடாது" - covai advocates protest

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 41பி சட்ட பிரிவை நீக்க வலியுறுத்தியும்,பிற மொழி நீதிபதிகளை நியமிக்கக் கூடாது என வலியுறுத்தியும் கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீதிமன்ற வாயிலின் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Sep 20, 2019, 3:44 PM IST

மத்திய அரசு தமிழ்நாடு அரசு நீதிபதிகள் தேர்வில் தமிழ் தெரியாதவர்களும் பங்கேற்கலாம் என்று சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதை கண்டித்து வழக்கறிஞர்கள் சார்பில் கன்னியாகுமரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி, கோயம்புத்தூர் மாவட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

அதன்படி நாகர்கோவிலில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தமிழ்நாடு புதுச்சேரி கூட்டு குழு வழக்கறிஞர்களும் கோயம்புத்தூர் நீதிமன்ற வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்ட வந்துள்ள 41பி சட்ட பிரிவை நீக்கவும் வலியுறுத்தினர். இந்த 41பி சட்ட பிரிவானது சாலை விபத்து, போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர்களே தண்டனை வழக்கு பதிவு செய்யும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க:

வழக்கறிஞரை தாக்கிய போலீஸார்! வலுவான போராட்டம் ஆரம்பம்!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகை!

Intro:மற்ற மொழி நீதிபதியை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்றும்
போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்ய கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.Body:மத்திய அரசு கொண்ட வந்துள்ள 41பி சட்ட பிரிவை நீக்க வலியுறுத்தியும்,பிற மொழி நீதிபதிகளை நியமிக்க கூடாது என வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 41பி என்ற பிரிவில் சாலை விபத்து மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர்களே தண்டனை வழக்கு பதிவு செய்யும் வகையில் உள்ளது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு புதுச்சேரி கூட்டு குழு வழக்கறிஞர்கள் நீதிமன்ற வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் நடை ஆர்ப்பாட்டத்தின் போது இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த போது தமிழில் வழக்காடும் வழக்குரைஞர்களே சிரமப்படும் நிலையில் வெளி மாநில நீதிபதிகளை பணியமர்த்தினால் நீதிமன்றத்தை நாடி வரும் வழக்குகளுக்கு பெரிய இழப்பு ஏற்படும் என தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.