இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பனை விதைகள் பயிர் செய்தல், குளங்களை சுத்தப்படுத்துதல் உள்ளிட்டப் பணிகளில் அக்கட்சியினர் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சல், ஈத்தவிளை பகுதியில் உள்ள நீர் நிலைகளையொட்டி பனைவிதைகள் நடும் பணியில் குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து சுங்கான்கடை பகுதியிலுள்ள குளத்தை சுத்தம்செய்து, அதனருகில் பனைவிதைகளை நட்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தில் இதுவரை 68 ஆயிரம் விதைகள் நடப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஊர் குளத்தைத் தூர்வாரி, குளக்கரையில் 400 மரக்கன்றுகள் நட்ட கிராம மக்கள்!