இது, குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குமரி மாவட்டத்தில் சமீப காலமாக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஆகவே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நோயாளிகள் பலர் கேரளாவுக்குச் சென்று சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இதற்கிடையே கடந்த 6 மாதமாக கரோனா தொற்று அதிகமாக காணப்படுகின்றது. இதனால் திருவனந்தபுரத்திற்கு சிகிச்சைக்குச் சென்ற புற்றுநோயாளிகளை கேரள அரசு திருப்பி அனுப்பியது.
இதனால் போதிய சிகிச்சை கிடைக்காமல் பலர் இறந்தனர். எனினும் கேரள அரசு இதனைக் கண்டுகொள்ளவில்லை. இது சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது.
குமரி மாவட்டத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் பலமுறை நான் பேசிவருகிறேன். ஆனால் அதிமுக அரசு செவிசாய்க்கவில்லை.
எனவே தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு குமரி மாவட்ட மக்களின் நலனைக் கருதி உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மண்டல புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்திருந்தார்.