கன்னியாகுமரி மாவட்டம் குளத்தூர் சானல் கரை ரோடு பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் சாலையை சீரமைக்க ஊர் பொதுமக்கள் தரப்பில் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அக்கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ. ஆஸ்டின் மாநகராட்சி சாலை நிதியிலிருந்து 37 லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டில் சாலை பணியை தொடங்க அனுமதி கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து தார் சாலை அமைக்கும் பணி இன்று(ஆக்.1) தொடங்கியது. இதை அத்தொகுதி எம்.எல்.ஏ. ஆஸ்டின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.