ETV Bharat / state

அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் - அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை! - Kanniyakumari District

கன்னியாகுமரி: அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

minister-dindigul-srinivasan
author img

By

Published : Jun 23, 2019, 10:03 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கீரிப்பாறை, பரளியாறு, மணலோடை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்பது அரசு ரப்பர் தோட்டம் உள்ளது. அரசு ரப்பர் கழகத்தினால் பராமரிக்கப்படும் இத்தோட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்கள் இடைக்கால ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தை இறுதி பேச்சுவார்த்தையாக மாற்றி அரசாணை பிரப்பித்ததை கண்டித்தும், தொழிலாளர்களின் நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களின் கோரிக்கைகள் குறித்து, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் , ரப்பர் கழக அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

இக்கூட்டத்தில், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும் என்றும், அரசு ரப்பர் கழகத்தில் அலுவலர்கள் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதியளித்தார் என்று கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

TN_KNK_03_23_FORESTMINISTER_REVIEW_SCRIPT_TN10005 எஸ்.சுதன்மணி,கன்னியாகுமரி கன்னியாகுமரி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது இதில் தொழில் சங்கங்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்து சென்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் சட்டமன்ற கூட்ட தொடரில் இது தொடர்பாக விரிவான விவாதங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அரசு ரப்பர் கழகத்தில் அதிகாரிகள் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதி அளித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தியாவிற்கு அந்நிய செலவாணியை ஈட்டி தரும் முக்கிய பண பயிர்களில் ஒன்றான ரப்பர் உற்பத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. இதில் தனியார் ரப்பர் தோட்டங்கள் , அரசு ரப்பர் கழகம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அரசு ரப்பர் கழகத்தில் கீரிப்பாறை, மணலோடை உட்பட மாவட்டம் முழுவதும் ஒன்பது  ரப்பர் தோட்டங்களிலும்  2500  க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிவடைந்தது. அதன் பின்பு அந்த ஒப்பந்தத்தை மறுபடியும் நீட்டிப்பு செய்து நிறைவேற்றி தர ரப்பர் தோட்ட தொழிற்சங்கங்கள் அரசுடன் 37 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை இடைக்கால ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை ஒப்பந்தத்தை இறுதி பேச்சுவார்த்தையாக மாற்றி அரசாணை பிரப்பித்ததை கண்டித்தும் தொழிலாளர்களின் நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் அரசு ரப்பர் கழகத்தில் நிலவிவரும் நிர்வாக சீர்கேட்டை அரசு சரி செய்ய கேட்கும் அனைத்து தொழில்சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்று இது தொடர்பான ஊதிய உயர்வு பேசிச்சுவர்த்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே ,தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் , மற்றும் ரப்பர் கழக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். இதில் தொழில் சங்கங்களின் கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்து சென்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் சட்டமன்ற கூட்ட தொடரில் இது தொடர்பாக விரிவான விவாதங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அரசு ரப்பர் கழகத்தில் அதிகாரிகள் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதி அளித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.