கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாகர்கோவிலில் உள்ள வாக்கு எண்ணும் மையமான கோணம் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 300க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜாக்கமங்கலம் காவல்நிலைய தலைமைக் காவலர் கிருஷ்ணகுமார், மற்றொரு காவலரான ஸ்ரீகுமாரிடம் கடந்த 30ஆம் தேதி தகராறில் ஈடுபட்டதோடு, ஸ்ரீகுமாரின் வாகனத்தையும் கிருஷ்ணகுமார் உடைத்தார். இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் கிருஷ்ணகுமாரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதனையடுத்து இதுகுறித்து நாகர்கோவில் உதவிக் காவல் கண்காணிப்பாளார் ஜவகர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில் கிருஷ்ணகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.