ETV Bharat / state

ஓமன் நாட்டில் சிக்கித்தவிக்கிறேன் என குமரி இளைஞர் வேதனை பொங்க வெளியிட்ட வீடியோ - Fake case against tamil youth

கன்னியாகுமரி மாவட்டத்தைச்சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓமன் நாட்டில் சிக்கித் தவிப்பதாகவும் அவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து அந்நாட்டினர் பிடித்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சுரேஷ் காணொலி மூலம் உதவி வேண்டி கோரிக்கைவிட்டுள்ளார்.

Etv Bharatஓமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி இளைஞர் மீட்குமாறு வீடியோ

author img

By

Published : Aug 17, 2022, 3:24 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் கோயில் தெரு பகுதியைச்சேர்ந்தவர், சுரேஷ்(44). இவருக்கு பிரேமி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

சுரேஷ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓமன் நாட்டில் அந்நாட்டின் சுற்றுலா துறையின் கீழ் இயங்கும் தனியார் உணவகத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி பிரேமி தனியார் மருத்துவமனையில் செவிலியராகவும் பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் மூன்று குழந்தைகளையும் ஓமன் நாட்டிலேயே படிக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, கரோனா காரணமாக இவர்கள் இருவரும் வேலையை இழந்துள்ளனர்.
இதனால் குடும்பத்துடன் இந்தியா திரும்ப இருந்த சுரேஷ் தான் 19 ஆண்டுகளாக பணிசெய்த நிறுவனத்தில் தனக்கான பணப்பிடிப்பு (செட்டில்மென்ட் ) தொகையினை கேட்டுள்ளார். அதை கொடுக்க நிர்வாகம் மறுத்துள்ளது. இதனால் அந்நாட்டின் நீதிமன்றத்தில் சுரேஷ் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதில் அவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனை எதிர்த்து நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. இந்தச் சூழ்நிலையில் கரோனா உச்ச கால கட்டத்தில் அங்கிருந்து சொந்த நாடு செல்ல குடும்பத்துடன் விமான நிலையம் வந்த அவரை நிறுவனத்தில் நடைபெற்ற வேறு ஒரு வழக்கில் தொடர்புபடுத்தி, இந்தியா செல்ல ஓமன் நாட்டு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் தனது மூன்று குழந்தைகளை மட்டும் அழைத்துக்கொண்டு சுரேஷின் மனைவி பிரேமி மட்டும் இந்தியா திரும்பினார்.

கன்னியாகுமரி வந்த பிரேமி இது குறித்து மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவற்றிற்கு மனு அனுப்பி கணவரை இந்தியா கொண்டுவர முயற்சி செய்துள்ளார். மேலும் வருமானம் இல்லாமல் குடும்பச்செலவு மற்றும் வேலை இல்லாமல் வெளிநாட்டில் தவிக்கும் தனது கணவரின் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மூன்று குழந்தைகளையும் வயதான தனது மாமியார் பாத்திமா மேரி வசம் ஒப்படைத்து விட்டு சவூதி நாட்டிற்கு செவிலியர் வேலைக்குச் சென்றுள்ளார்.

75 வயதான பார்வை குறைபாடு உள்ள சுரேஷின் தாய் பாத்திமா மேரி சின்னமுட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் பெட்டிக் கடை நடத்தி தனது பேரக் குழந்தைகளை பராமரித்து வருகிறார். இந்நிலையில் நிரபராதியான தன்னை இந்தியா கொண்டு வர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுரேஷ் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் வெளிநாட்டில் தவிக்கும் தங்களது தந்தையை மீட்க வேண்டும் என சுரேஷின் குழந்தைகள் மற்றும் அவரது தாய் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தாய், தந்தை வெவ்வேறு நாட்டிலும் குழந்தைகள் வயதான பாட்டியுடனும் சிரமப்படுவதால் அரசு இதில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஓமன் நாட்டில் சிக்கித்தவிக்கிறேன் என குமரி இளைஞர் வேதனை பொங்க வெளியிட்ட வீடியோ

இதையும் படிங்க:வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கோரிய வழக்கு - மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.